நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கேரள கவிஞன் ஆற்றூர் ரவி வர்மா….  உலகிலேயே அவரவர் தாய்மொழியில் ஆகச்சிறந்த இலக்கியங்களை படிக்கிற அரிய வாய்ப்பு கிரேக்கர்கள்… சீனர்களை தாண்டி உலகத்தில் தமிழர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.

அந்த தமிழ் மொழி என் தாய்மொழி மலையாளத்திற்கு தாய்மொழி என்பதில் எனக்கு பெருமை. என் பாட்டியின் மொழி என்பதில் எனக்கு பெருமை. என்று பதிவு செய்திருக்கிறான். காந்தி அவர்களும்,  லியோ டால்ஸ்டாய் அவர்களும் நண்பர்கள். மிகப் புகழ்பெற்ற எழுத்தாளன் லியோ டால்ஸ்டாய். அவர் காந்தி அவர்கள் நண்பர். 

கடிதப் பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள் என்  அன்பு தம்பி,  தங்கைகளே…. லியோ டால்ஸ்டாய் காந்திக்கு எழுதுன கடிதங்களில் ஒரு திடீர் மாறுதல். பரிவு, கருணை, இறக்கம், அன்பு, இதெல்லாம் அதிகமாக அந்த கடிதங்களில் பரவி கிடக்கிறது. இந்த வார்த்தைகள்..  ஆங்காங்கே கண்ணீர் துளிகள்…. எழுத்துகள் நனைந்து இருக்கிறதே….

காந்தி திருப்பி,  என்ன லியோ டால்ஸ்டாய் நிறைய மாறுதல்? அன்பு, பரிவு, கருணை, இறக்கம் என்ற சொற்களெல்லாம் நிறைய பரவி கிடக்கிறது. அப்படின்னு கேட்டார். அதற்கு ஒன்னும் காரணம் இல்லை காந்தி,  திருக்குறள் என்ற ஒரு நூலை படித்தேன். அதிலிருந்து எனக்குள் ஒரு பெரும் மாறுதல் வந்துட்டது என்கின்றான். அப்படியா ? அந்த நூல் எங்க இருக்குது ? உன் நாட்டுல….

தமிழ்நாடு என்ற ஒரு இடத்தில் திருவள்ளுவர் எழுதியிருகான்டா.. காந்தி அதை ஆங்கில பதிப்பில் படித்தி விட்டு, கடைசியா சொல்றாரு….  இன்னொரு பிறப்பு என்று எனக்கு இருக்குமானால் நான் தமிழனாக பிறக்க வேண்டும். அதுக்கு காரணம் இந்த திருக்குறள் எழுதப்பட்ட அதன் தாய் மொழியிலேயே….  ஒரு முறை நான் அதை படிக்க வேண்டும்ன்னு என சீமான் பேசினார்.