1935 இல் பக்தராமதாஸ் என்ற திரைப்படத்தில் மாதன்னா என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அந்த காலத்தில் திரைத்துறையில் பல நாராயணங்கள் இருந்ததால் இவரது பெயரை சுருக்கி எம்.என் நம்பியார் என பெயர் வைத்தார். அந்தப் பெயரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகள் குறைவாக கிடைத்த நிலையில் 1945 ஆம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் நம்பியாரின் நடிப்பை பார்த்து மகிழ்ந்து அவரை தங்களது நிறுவன நடிகராக சேர்த்துக் கொண்டார். வேலைக்காரி மற்றும் கல்யாணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நாயகனாக நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க தொடங்கிய நம்பியாருக்கு வில்லன் வேடம் கச்சதமாக பொருந்தியது. வில்லன் வேடத்தில் மாறுபட்ட தனது குரல் வளர்த்தால் புகழின் உச்சத்திற்கு சென்றார். சுதேசி என்ற திரைப்படம் தான் நம்பியார் நடித்த இறுதி திரைப்படம். அதன் பிறகு இவர் முழு ஓய்வுக்கு சென்று விட்டார். 1946 ஆம் ஆண்டு ருக்மணி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இவர் காலமானார்.