கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனித தளமான வாரணாசியில் உள்ள அனுமார் கோவில் மற்றும் வாரணாசி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஸ்கர் ஏ தொய்பா பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளில் 28 இந்து சமூகத்தினர் உயிரிழந்தனர். அதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு லஸ்கர் ஏ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து வாரணாசி தொடர் குண்டு வெடிப்புகள் சம்பவத்தை விசாரணை செய்த காவல்துறை இதில் தொடர்புடைய இயக்கத்தின் வங்காளதேசம் நாட்டின் வலியுல்லா கானை பிராக்கியராஜில் வைத்து காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக நடைபெற்ற வழக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் ஏழாம் தேதி நீதிமன்றம் வலியுல்லா கணக்கு பல்வேறு குற்ற பிரிவுகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் வரலாற்றில் மறக்க முடியாத நாளாகவும் கருதப்படுகிறது.