இன்று பிறந்தநாள் காணும் இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவின் கிரிக்கெட் வாழ்கை எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்..

சுமார் 17 மாதங்களுக்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறுவார். இன்று அவரது பிறந்தநாள். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். லண்டனில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணிக்காக அவரது சிறப்பான பங்களிப்பை பற்றி இப்போது பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாகவும் இருந்துள்ளார்.

#ரஹானே மகாராஷ்டிரா மாநிலத்தில் 1988 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார்.

#உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

#கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஹானே தனது 7வது வயதில் டோம்பிவிலியில் முறையான கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கினார்.

#17 வயதிலிருந்தே இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரவின் ஆம்ரேவிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது.

#19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட், முதல்தர கிரிக்கெட் மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ரஹானே, 2011ல் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

#அதே ஆண்டு நவம்பரில் அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

#ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடும் பதினொன்றில் இடம் பெற சுமார் 16 மாதங்கள் காத்திருந்தார்.

#இந்த காலகட்டத்தில் இந்தியாவுக்காக 7 வீரர்கள் அறிமுகமானார்கள்.

#பத்து ஆண்டுகளுக்கு முன்பு (2013) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.

#இந்திய அணிக்காக டெஸ்டில் அறிமுகமான 278வது வீரர் ஆவார்.

#அவர் அந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு இன்னிங்ஸ் விளையாடி 217 ரன்கள் எடுத்தார்.

#இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும்.

#2014 முதல் 2019 வரை, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டுக்கு சுமார் 500+ ரன்கள் எடுத்தார்.

#2021ல் அவரது ஃபார்ம் மோசமான நிலைக்கு திரும்பியது.

#இதையடுத்து ஜனவரி 2022க்கு பிறகு அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

#இருந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 80 போட்டிகளில் 140 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரஹானே, 4,931 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 சதங்களும் 25 அரைசதங்களும் அடங்கும். அவர் இந்திய அணிக்காக 192 போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) விளையாடி 8,268 ரன்கள் எடுத்தார்.

ரஹானே மற்றும் கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியை 6 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானே வழிநடத்தியுள்ளார். இந்தியா 4 முறை வென்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்தது. 2020ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்டுகளுக்கு ரஹானே கேப்டனாக இருந்தார். இதில் 2 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டி டிராவில் முடிந்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை 2-1 என கைப்பற்றியது. அப்போது கேப்டன் ரஹானேவை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினர். அடிலெய்டில் மோசமான தோல்விக்குப் பிறகு கிடைத்த வெற்றி இது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லாத வீரர்களுடன் ரஹானே ஆஸ்திரேலியாவில் விளையாடினார்.

வெளிநாட்டில் ரஹானேவின் டெஸ்ட் ரன்கள் :

வெலிங்டனில் 118 ரன்கள்
லார்ட்ஸ் 103 ரன்கள்
மெல்போர்னில் 147 ரன்கள்
கொழும்பில் 126 ரன்கள்
ஜமைக்காவில் 108*
நாட்டிங்ஹாமில் 81 ரன்கள்
மெல்போர்னில் 112 ரன்கள்

அவரது 12 டெஸ்ட் சதங்களில், 8 வெளிநாடுகளில் அடித்தவை.