நடுத்தர பொருளாதார வசதியுள்ள குடும்பத்தில் 1818 -ஆம் ஆண்டு டையர் நகரத்தில் பிறந்தவர் காரல் மார்க்ஸ். இவர் ஆரம்ப கல்வியை அங்கேயே கற்று பின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் காரல் மார்க்ஸ் சட்டம் பயின்று கொண்டிருக்கும்போதே தத்துவம் இல்லாமல் எதுவும் முழுமை பெறாது என நம்பியுள்ளார். அந்த காலகட்டத்தில் ஹெகலின் இயக்கவியல் தத்துவம் அன்றைய இளம் தத்துவவியல் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்க்கஸும் அதில் ஒருவராக தொடக்கத்தில் இணைந்தார். தத்துவவாதிகளின் உலக வாழ்க்கையை வியாக்கியானம் செய்கின்றார்களே தவிர சமூக அமைப்பை மாற்றுவது எப்படி என்பதே முக்கியமாகும்.

உலகை மாற்ற வெறும் சிந்தனை மட்டும் போதாது. அதற்கு நடைமுறை, செயலாக்கம் தேவை என கூறியவர் காரல் மார்க்ஸ். 1844 -ஆம் ஆண்டு பாரிசில் முதன் முதலில் பெடரிக் ஏங்கல்சை சந்தித்தார்.  இவர்களது நட்பு இறுதிவரையில் இரட்டையர்கள் என அழைக்கும் அளவிற்கு தொடர்ந்தது. 1947 ஆம் ஆண்டு காரல் மார்க்ஸ் எழுதிய நூல் தத்துவத்தின் வறுமை. பெல்ஜியம் நாட்டின் ஸ்பெஷல் நகரத்தின் ரகசியமாக இயங்கி வந்த லீக் ஆஃப் ஜஸ்ட் என்னும் அமைப்பை மக்கள் மத்தியில் பகிரங்கமாக இயக்க அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் கம்யூனிஸ்ட் லீக்கிற்காக காரல் மார்க்ஸும், ஏங்கல்சும் இணைந்து 1848 ஆம் ஆண்டு எழுதிய நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையாகும். இந்த நூல் உலகில் 95 மொழிகளுக்கும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டது.

மார்க்சின் ஆய்வில் மிக முக்கிய கண்டுபிடிப்பு உபரி மதிப்பாகும். அரசியல் பொருளாதாரத்தின் சாரம்சாரம் தான் உபரி மதிப்பு தத்துவம் என கூறியுள்ளார். பல்வேறு படையெடுப்புகள், பிரிட்டிஷ் காலணி ஆதிக்கம், வெள்ளம், வறட்சி, பஞ்சம், நோய் என பல வந்தபோதும் இந்திய கிராம அடிப்படை கட்டமைப்பை எதனாலும் மாற்ற முடியவில்லை. அதற்கு காரணம் சாதிய முறை மிகவும் கட்டுப்பட்டு கிடப்பதாக சுட்டிக்காட்டுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு இந்தியா காலனி நாடாக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தாராளமயம், தனியார்மயக் கொள்கைகள், உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 30 வருடங்களாகியும் வறுமையை, பொருளாதார ஏற்ற தாழ்வுகளை, நவீன காலனி ஆதிக்கத்தை, வேலையின்மையை, போரை முதலாளித்துவத்தால் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.

அதேபோல் உலக நாடுகள் இன்று சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சனை புவி வெப்பமயமாதல் ஆகும். சூழலியல் குறித்து அன்றே  குறிப்பிட்டுள்ளார். முதலாளித்துவத்தின் கட்டுப்படுத்த முடியாத லாப வரி உழைப்பு சுரண்டலோடு நின்று விடாது. அதையும் தாண்டி மனித குலமே வாழத் தகுதியற்றவையாக பூமி மாறும் அளவிற்கு இயற்கை வளங்கள் மீது அவர்களது கோரக்கரங்களும் நீளம் என எச்சரிக்கை விடுத்தார். அதாவது உலகம் முழுவதும் கார்ப்பரேட்டுகள், வலதுசாரிகளின் பலம் சற்று ஓங்கி இருக்கும். இந்த சமயத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் மருத்துவம், வேலை, கல்வி போன்றவை அடிப்படை உரிமைகளுக்காக போராடும் இளைஞர்களின் கரங்களில் மார்க்ஸின் நூல்களையும் பதாகைகளையும் பார்க்க முடிகிறது. உலக வறுமையை தீர்ப்பதற்கு அறிவியல் வழி கண்டறிந்து கூறிய மாமனிதன் மார்க்ஸ்.

காரல் மார்க்ஸ் இன்று நீங்கா புகழ் பெற்றிருப்பதற்கு காரணமானவர்கள் இரண்டே பேர் தான். ஒன்று செல்வ செழிப்பு உள்ள குடும்பத்தில் பிறந்து அனைத்தையும் உதறி  தள்ளி  காரல் மார்க்சை காதலித்து கரம் பிடித்த ஜென்னி. மற்றொருவர் பெடரிக் ஏங்கல் இல்லாமல் இருந்திருந்தால் மார்க்ஸின் வாழ்க்கை அவரது கொல்  வறுமையால் இன்னும் விரைவாகவே முடிந்திருக்கும். இறுதிவரை மார்க்ஸின் குடும்பத்திற்கும் சேர்ந்தே உழைத்து வந்தவர்  பெடரிக் ஏங்கல் தான். மூலதனத்தின் இறுதி பகுதியை முடிப்பதற்குள்ளாகவே மார்க்ஸ் தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டார். பெடரிக் ஏங்கல் தான் மார்க்ஸின் மறைவுக்கு பின் அனைத்தையும் தொகுத்து மூலதனம் முழுமையாக வெளிவர காரணமானவர்.