செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு அறிஞர் அண்ணா அவர்களை எத்தனை இடத்துல நான் பேசி இருக்கேன் ? உதாரணத்துக்கு எத்தனை இடத்துல கடந்த ஒரு வருட காலமா நான் பேசி இருக்கேன்னு என்று பாருங்க…  குறிப்பாக  மது ஒழிப்பை பொறுத்தவரை,  தமிழகத்திற்கு இன்னைக்கு ஒருத்தர் இலக்கணம் என்றால் அறிஞர் அண்ணா. இந்த பேச்சையும் நீங்க போடுங்க.

அறிஞர் அண்ணா அவர்கள் என்ன சொன்னாங்க ?  மதுக்கடையை ஆரம்பித்து தான், இந்த அரசை நடத்த வேண்டும் என்றால் அது புளுத்துப்போன தொழு நோயாளி கையில் இருக்கக்கூடிய வெண்ணைக்கு சமம். அதனால் அதை செய்ய மாட்டேன் என்றார். அதன் பிறகு இல்லைங்கையா நீங்க மது கடையை முழுசா ஓபன் பண்ணிட்டீங்கன்னா….  11 கோடி ரூபாய் அப்ப வருமானம் வரும்னு சொன்ன போது அண்ணா அவர்கள் என்ன சொன்னார் ?

நீங்க 11 கோடியை பாக்குறீங்க…  நான் பெண்களுடைய அழுகுரலை பார்க்கிறேன். அதனால எந்த காரணத்திற்கும் நான் மது கடைக்கு கையெழுத்துப் போடவே மாட்டேன். அதன் பிறகு மதுக்கடைக்கு கையெழுத்து போட்டது யார் ? கருணாநிதி அவர்கள்… ராஜாஜி அவங்க வீட்டுக்கு போய் வேண்டாம்னு சொன்னாங்க. இத பல  இடத்துல பேசி இருக்கேன்.

இன்னைக்கு நாமெல்லாம் சந்திராயன் 3, சந்திராயன் – 2 எல்லாம் பார்க்கிறோம். அந்த லாஞ்ச் எங்க இருந்து ஆரம்பிச்சு இருக்கனும்.  லாஞ்ச் நாகப்பட்டினத்தில் இருந்து ஆரம்பிச்சி இருக்கனும். ஏன்னா ISRO  முதல்முதலாக தமிழகத்தில் நாகப்பட்டினத்துக்கு தான் வந்தது.

அறிஞர் அண்ணா அப்ப முதலமைச்சர். ஆனால் அன்னைக்கு நம்ம கெட்ட நேரம் அண்ணா அவர்களுக்கு தோல்பட்டை வலி. அவர் போகாமல் இன்னொரு அமைச்சர் போய்,  அந்த மீட்டிங் சரியா போகாததால், மீட்டிங் வந்த சதீஷ் தவான் அவர்கள் கோபித்து கொண்டு,  இங்க வந்த ISROவை  ஸ்ரீஹரிகோட்டாவில் கொடுத்துட்டாங்க.

இத்தனை சரித்திரத்தை நான் பேசியிருக்கேன். குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா என்று நான் சொன்னேன். அதனால் அண்ணா அவர்களை எங்கேயுமே… தரக்குறைவாக எப்போதுமே விமர்சித்தது கிடையாது என தெரிவித்தார்.