நாம் தமிழர் கட்சி சார்பில் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொருளாதார வளர்ச்சி என்பது…. பொருளாதார என்பது எங்கு இருக்கிறது என்று என் உடன் பிறந்தார்கள் புரிஞ்சுக்கணும்.  சிற்றுகளை   சமவீதத்தில் வளர்த்து எடுக்காமல்,  கிராமங்கள் காலியாகாமல்…  பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நகரங்கள் பிதுங்கி வழியும்.

இன்னைக்கே இந்த நிலைமை என்றால் ? இன்னைக்கு ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயா என்றால் 5 ஆண்டுகளில் 2000 ரூபாய் ஆக்காதுன்னா… நீ எப்படி நம்புற. தக்காளி 150 ரூபாய் அப்படின்னா… அன்னைக்கு ஏன் 1500 ரூபாயாக வராது. அந்த நிலைமை வந்துச்சா… என்ன பண்ணுவ ? எல்லா காலத்திலும் நமக்கு ஏப்ரல், ”மே” – ல தண்ணி கிடைக்க மாட்டேங்குது.

குடத்த வச்சிட்டு நாம சின்னம்மா, பெரியம்மா, அக்கா, தங்கச்சி எல்லாம் வீதியில நிக்கிறாங்க. ஆனால்  எல்லா காலத்திலேயும் விற்கிற முதலாளிக்கு மட்டும் தண்ணீர் கிடைக்குதே, அது எங்கே இருந்து கிடைக்குது. அவன் போன் அடிச்சா வந்து கேன் கேனாக இறக்கிவிட்டு போறானே  எப்படி ? எல்லா கடையிலும் kinley, aquafina கிடைக்குது,  அது எப்படி? அப்ப தண்ணீர் விற்பனைக்கு கிடையாது… தண்ணீர் மானுட தேவை இல்லை.

தண்ணீர் உலக உயிர்களின் உயிர் தேவை. அது ஆட்டிற்கு..  மாட்டிற்கு… கோழிக்கு…  குஞ்சுக்கு… ஈக்கு… எறும்புக்கு… நாய்க்கு…. நரிக்கி… பூனைக்கு… சிங்கத்துக்கு… கரடிக்கு எல்லாத்துக்கும். அது பூண்டுக்கு…  மரத்துக்கு… புல்லுக்கு… செடிக்கு எல்லாத்துக்குமான…  உயிர் தேவை நீர். அந்த நீர் சந்தை இல்லை, நீர் விற்பனைக்கு என் மாநிலத்தில் கிடையாது. நீ எங்கேயும் வித்துக்க…

அப்போ எல்லாம் நீ நீட்டுன்னு சொல்லேன்…  வேற எங்கேயாவது நீட்டுன்னு சொல்லிடுவேன். பொது சிவில் சட்டமாம்டா… ஒரே சட்டமாம்டா? ஆமாண்டா. அது இந்தியாவிலேயே அமல் ஆகுதாம். நமக்கு இல்லையாம் டா அப்படின்னு சொல்லிடுவேன்.

இப்ப சொன்ன பாருங்க என் தம்பி இடும்பாவனம் கார்த்தி சொன்னான்…  சந்திரசேகர ராவ் காட்டுகின்ற ஆட்டம்…  அவரு கூட கொஞ்சம் படிச்சவரு,  நாகரீகமா, நகர்புறத்தில வளர்ந்திருப்பாரு…  நான் யார் தெரியுமா ? நல்ல அடர்ந்த பணகாட்டுள்ள …  நல்ல கருவ காட்டுக்குள்ள… வாழ்ந்த ஒரு காட்டு பைய புரியுதா ? அதனால நீ என்கிட்ட எல்லாம் இந்த ஆட்டம் எல்லாம் காட்ட முடியாது என தெரிவித்தார்.