தினமும் உணவில் வெந்தயத்தை சேர்த்து சாப்பிட வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் உடலில் சர்க்கரை அளவை சீராக்க மேம்படுத்தும். இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். வெந்தயத்தை வறுத்து அதில் சோம்பு, உப்பு சேர்த்து மோரில் கரைத்துக் குடித்தால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி உடனடியாக நிற்கும் என்று கூறப்படுகிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் வெந்தயத்தை உணவில் நிச்சயமாக சேர்க்க வேண்டும் என்றும் இதை தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வெந்தயத்தை ஊற வைத்து நன்கு அரைத்து பேஸ்ட் போல ஆக்கி அதனை முகத்தில் பூசி வந்தால் பருக்கள் குறையும். மேலும் முகம் பொலிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.