மொழிப் போர் தியாகிகளை நினைவுகூறும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றியபோது “முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி போன்றோர் தமிழ் உணர்வாளர்கள் ஆவர். இவர்களில் பலரும் எழுதியும் பேசியும் இந்தி திணிப்பின் ஆபத்தை மக்களுக்கு விளக்கினார்கள்.

இந்தியை ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, அதிகாரம் செலுத்தக்கூடிய மொழியாக பா.ஜ.க அரசு முயற்சித்து கொண்டிருக்கிறது. மேலும் மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் ஆங்கிலத்தை அகற்ற பார்க்கின்றனர். இந்திக்கு அந்த இடத்தை தாரை வார்க்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கு தமிழும் ஆங்கிலமும் இருமொழி கொள்கை தான். தமிழ் மொழி இந்திய ஆட்சியின் மொழி ஆக ஒன்றாக வேண்டும். அத்துடன் அனைத்து அலுவலக செயல்பாடுகளும் தமிழிலேயே இருக்க திருத்தம் செய்யவேண்டும். உயர்நீதிமன்றம் வழக்காடு மொழியாக தமிழை ஆக்கவேண்டும். இதுவே தங்களின் கொள்கை ஆகும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.