செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு நான் விவசாயி தானே.  விவசாயி என்னுடைய அடையாளம்.  அதற்குப் பிறகுதான் அரசியல்வாதி என்கின்ற அடையாளம். அதற்குப் பிறகுதான் பிஜேபி என்கின்ற அடையாளம். விவசாயி என்ற அடையாளத்தில் தெளிவாக இருக்குறேன். அதை எப்ப விட்டுக் கொடுத்து இருக்கிறேன் ?

இன்னைக்கு விவசாயம் பண்ணிட்டு தான் அரசியல்வாதியா இருக்கேன்.   தோட்டத்துக்கு போகலையா ? காட்டுக்கு போகலையா ? ஆடு,  மாடு பாக்கலையா ? அதனால கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கின்றது.  நீங்கள் எல்லாம் பெரிய ஆளா வரணும்னு நான் நினைக்கிறேன்.

தப்ப தப்புன்னு சொல்லுங்க… சரிய சரின்னு சொல்லுங்க… முதலா வாரேன். கேள்விகள் முறையாக இருக்க வேண்டும். நீங்க எல்லாம் வளரும்னு நினைக்கிறேன். என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் ?  நீங்க வளரனும்னு நான் நினைக்கிறேன். நீங்க அப்படியே இந்த சேனல்,  இதுக்கப்புறம் அடுத்த சேனல் என மாறி மாறி  40 வயசுக்கப்புறம் எங்கயுமே இல்லை என ஆயிடக்கூடாது. அப்படியே டெல்லிக்கு போங்க.

டெல்லியில் ஒரு நேஷனல் டிவில தலமை எடிட்டரா உட்காரணும். அதுக்கு ஒரு கேள்வி கேட்பதற்கு ஒரு பக்குவமும், ஒரு சார்புனஸும் இருக்கணும். அதனால உங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கேன். உங்களுக்கு நல்ல எண்ணத்தில் அட்வைஸ் பண்ணிட்டு இருக்கேன். நீங்க நல்லா இருக்கணும் அப்படிங்கிற ஒரு நல்ல எண்ணத்தில் நான் அட்வைஸ் பண்ணிட்டு இருக்கேன்.

இதை மக்கள் எல்லாம் பார்க்கிறார்கள். இதை சேனலில் போட்டு கீழே  கமெண்ட்ல மக்கள் என்ன போடுறாங்கன்னு போய் பாருங்க ? நீங்க என்ன கேள்வி கேட்டீங்கன்னா…  நான் பதில் கேள்வி கேட்கலாம்..   உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கும்போது,  அந்த லட்சுமண ரேகையை கேள்வி தாண்ட கூடாது என தெரிவித்தார்.