காவிரியில் உரிமை பெற்று தராத திமுக இந்தியா கூட்டணியில் இருந்து வெளிவர வேண்டும்  என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ்,

காவிரி பிரச்சனை 200 ஆண்டுகள் பிரச்சனை. அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது. காவிரியில் திடீர் தீர்வுகள் எதுவும் வர போறதில்லை. நாம்  இன்னும்  கடுமையாக வேலை செய்ய வேண்டும்… செயல்படுத்த வேண்டும்…. நீதிமன்றத்தை அணுக வேண்டும்…. நமக்கு ஒரே வழி உச்ச நீதிமன்றம் தான். நானும் அந்த குழுவில் போனேன்.. மத்திய நீர்வளத்துறை துறை அமைச்சரை சந்தித்தேன்.

நான்  அவருகிட்ட யோசனை சொன்னேன்.  இதுக்கு ஒரே தீர்வு என்னன்னா….  பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (  Bhakra Beas Management Board ) என வட இந்தியாவில் BBMB என சொல்லுறது. இதுல என்னென்ன்னா… பக்ரா பியாஸ் ஆற்றில் இருக்கின்ற அத்தனை அணைகளும்….  பக்ரா மேனேஜ்மென்ட் போர்டுக்கு கீழே இயங்கும். அந்த போர்டு தான் எல்லா டேம்களையும்  கண்ட்ரோல் பண்ணும். அந்த டேம் எங்கெங்கே இருக்கு அப்படின்னா…

இமாச்சலப் பிரதேசம்,  சண்டிகர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி இத்தனை மாநிலத்தை சார்ந்த அத்தனை அணைகளையும் இந்த மேனேஜ்மென்ட் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த போர்டு 1964இல் அமைத்தது. அதே மாதிரி காவிரி மேலாண்மை வாரியம் ( Cauvery Management Board) கீழே கர்நாடகாவில் காவிரிபடுகையில்  உள்ள நான்கு பெரிய அணைகள், தமிழ்நாட்டிலே மேட்டூர் அணை என ஐந்து அணைகளும் காவிரி மேலாண்மை வாரியம் ( Cauvery Management Board)- கீழே இயங்கனும். கர்நாடக  அரசின் கட்டுப்பாடும்  தேவையில்லை. தமிழ்நாட்டில் நம்ம மேட்டூர் அணை கட்டுப்பாடு  கூட வேண்டாம். அதுக்கு மேல அவங்களால ஒன்னும் பண்ணவும் முடியாது என தெரிவித்தார்.