ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களை வென்று புதிய சாதனையை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற மகளிருக்கான கபடி இறுதி போட்டியில் இந்தியா மற்றும் சீனா தைபே அணிகள் மோதி கொண்டன. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி நிமிடம் வரை அதிரடியாக விளையாடி 26-25 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தங்கம் வென்றது. இதனால் இந்தியா முதல் முறையாக 100 பதக்கங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.