பால் பொருட்கள், எண்ணெய், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

பால், பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடை இல்லை என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.  14 பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்ட நிலையில், உணவுப்பொருட்களை அடைத்து விற்கும் கவர்களுக்கு 2020ல் தடை விதிக்கப்பட்டது.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 2020 அரசாணையை எதிர்த்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது. விலக்களிக்க மறுத்த 2020 அரசாணைக்கு தடைவிதித்து நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தமிழக அரசின் தடை தொடர்கிறது.