பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளபக்கத்தில், ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது.

அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்றத் தலையீடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமானவை, வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை” என தெரிவித்துள்ளார்..

பாஜகவினுடைய மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர், நாட்டின் முன்னாள் துணை பிரதமர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த எல்கே அத்வானி எனப்படும் லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சந்தித்து அவரை வாழ்த்து தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். நம் வாழும் காலகட்டத்தில் மிகப்பெரிய ஒரு அரசியல்வாதி என்றும், நாட்டினுடைய வளர்ச்சிக்காக அவர் பல்வேறு விஷயங்களை செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அவர் ஒரு சாதாரண விளிம்பு நிலையிலிருந்து நாட்டினுடைய துணை பிரதமர் உள்ளிட்ட பதவிகளுக்கு வந்திருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார். மேலும் உள்துறை அமைச்சர், தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளையும் அவர் வகுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜகவை நிறுவியவர்களின் ஒருவராக அத்வானி இருந்துள்ளார். அதன் பின்னர் பல்வேறு பொறுப்புகளையும் வைத்துள்ளார். பாஜகவை இந்த பெரிய அளவிற்கு வளர்த்து விட்டதில் அத்வானின் பங்கு மிகப் பெரியதாக இருக்கிறது. அத்வானியை பொருத்தவரை அவர் நவம்பர் 8ம் தேதி 1927 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இந்தியாவின் ஏழாவது துணை பிரதமராகவும் இருந்துள்ளார். 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதாவை தொடங்கியவர்களில் மிக முக்கியமானவர். இவரின் சேவை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நாட்டின் உள்துறை அமைச்சராக 6 வருடங்கள், 1998 இல் இருந்து 2004 வரை இருந்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக நீண்ட நாட்கள் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் அவர் வகித்துள்ளார். தற்போது தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அத்வானிக்கு நாட்டினுடைய மிகப்பெரிய  விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.