தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூரை சேர்ந்த முத்தம்மாள் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்காக பேசுவதாக கூறி அதற்காக ஆதார் வங்கி கணக்கு விவரத்தை கேட்டுள்ளார்.

அவற்றை கொடுத்த பிறகு செல்போனுக்கு வந்த ஓடிபி நம்பரை கூறுமாறு கேட்டுள்ளார். அவரும் ஓடிபி எண்ணை கூறியுள்ளார். அடுத்த நிமிடமே அவருடைய வங்கி கணக்கிலிருந்து 15,000 எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நிலையில் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.