ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4ல் இன்று இலங்கையை எதிர்கொள்கிறது இந்திய அணி.  

ஆசிய கோப்பையின் முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இன்று 2வது போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இப்போது இலங்கைக்கு எதிரான அனைத்து வீரர்களிடமிருந்தும் இதையே எதிர்பார்க்கலாம். பாகிஸ்தானை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 4 புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி உள்ளது.

இன்று இலங்கையை வீழ்த்தினால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். முன்னதாக இலங்கை அணி தனது முதல் சூப்பர் 4போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியுள்ளது. எனவே இன்றைய போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும். இன்றும் அதே கொழும்பு மைதானத்தில் நடைபெறுவதால் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs SL ஆசிய கோப்பை 2023 : வானிலை அறிவிப்பு

AccuWeather.com படி, பகலில் அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . 84% மழைப்பொழிவு மற்றும் பகலில் 95% மேக மூட்டத்துடன், மழைக்கான வாய்ப்பு 55% ஆகக் குறையக்கூடும், ஆனால் மேக மூட்டம் நாள் முழுவதும் இருக்கும்.

SL vs IND சாத்தியமான விளையாடும் XI

இலங்கை (SL):

பதும்நிஷாங்கா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (wk), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானகா (c), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜிதா, மதீஷ பத்திரனா.

இந்தியா (IND):

ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

சூப்பர் 4 அட்டவணை :