செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  A.R ரகுமான் அவர்கள் அனுமதி கேட்ட உடனே களத்தை ஆய்வு செய்து…  ஐயா இவ்ளோ வாகனம் தான் நிறுத்த முடியும். இது பிரச்சனை. அதனால நீங்க வேற இடத்தை தேர்வு செய்ங்க சொல்லிருக்கணும். இல்லைன்னா…  அதுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து,  ஒழுங்கு பண்ணி நடத்திருக்கனும். அதுக்கு தான் அரசு.

நடத்தவே நடத்தாத… எங்களால பாதுகாப்பே  கொடுக்க முடியாது என  சொல்லுறதுக்கு எதுக்கு அரசு ? எதுக்கு காவல்துறை ? நீ வீட்டைவிட்டு வெளில வந்தா…  செத்து போயிருவ…  கதவை பூட்டிட்டு உள்ளேயே படுன்னு சொல்லுறதுக்கு போலீஸ் தேவை இல்லையே  நீ வெளில வா.. சுதந்திரமா நடமாடு.. நீ என்ன செய்ற… உரிய பாதுகாப்பை நான் தரேன் என சொல்லுறதுக்கு தான் அரசும், காவல் துறையும்… சரிதானே  நான் சொல்லுறது… நீ எதுக்கு தம்பி விஜய் பட லியோ பாட்டு வெளியிட்டுக்கு  தடை பண்ணீங்க?

நேரு விழா அரங்கத்துல ஒரு குறிப்பிட்ட அளவுதான் ரசிகர்கள் கூடணும். இவ்வளவு தான் பண்ணனும்…   இது தான் பண்ணனும்…  அப்போ நீங்க எல்லாம் மாநாடு நடத்தும் போது லட்ச கணக்கா கூடுறாங்க.. உங்களுக்கு மட்டும் பாதுகாப்பு யாரு கொடுக்குறா? அமெரிக்கால இருந்து  ஸ்பெஷல் போர்ஸ் கொண்டுவரிங்களா? இல்ல ஆப்பிரிக்கால இருந்து கொண்டு வரீங்களா? அஸ்திரேலியால இருந்து கொண்டு வரீங்களா ? …இதே காவல் துறைதான என தெரிவித்தார்.