இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான NDA தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் மொத்தம் 404 பணியிடங்கள் காலியாக உள்ளது. எழுத்து தேர்வு செப்டம்பர் ஒன்றாம் தேதியும், நேர்முகத் தேர்வு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதமும், பயிற்சி 2025 ஜூலை இரண்டாம் தேதியும் தொடங்க உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 4ம் தேதிக்குள் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.