ஆதார் கார்டின் பயோ மெட்ரிக் LOCK செய்வதன் அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

ஆன்லைன் மோசடி என்பது தற்போது அதிகம் நடைபெறும் குற்ற சம்பவங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த மோசடி குறித்து பல விழிப்புணர்வு தகவல்கள் அரசு சார்பிலும் பிறர் சார்பிலும் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, குற்றங்கள் குறைந்தபாடில்லை. காரணம், இவ்வகையான மோசடிகள் ஒரே விதத்தில் நிகழாமல்  வித விதமான யுக்திகள் மூலம் கையாளப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆதார் மூலம் தற்போது வங்கிக் கணக்கில் பணம் திருடு போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. AEPS (adhaar enabled payment System ) என்னும் முறை மூலம் உங்களுடைய ஆதார் எண் , வங்கியின் பெயர் மற்றும் உங்களுடைய பயோ மெட்ரிக்-ஐ பயன்படுத்தி OTP இல்லாமல்  கூட பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

இந்நிலையில் நாம் பொதுவாக சிம்கார்டு வாங்க சென்றாலே அதற்கு ஆதார் எண்-ணும் நமது கைரேகையையும் நாம் பயன்படுத்த கூடிடும். சிலர் அதை திருடி பணம் பறிபோக வாய்ப்புள்ளது. இவ்வகையான மோசடிகளிலிருந்து தப்பிக்க உங்களது மொபைலில் எம் ஆதார் (Maadhar)என்ற செயலியை இன்ஸ்டால் செய்து அதில், உங்கள் ஆதார் தகவல்களை அளித்து பின் பயோமெட்ரிக் லாக் என்ற ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து விட்டால் இதிலிருந்து தப்பித்து விடலாம்.