இந்தியாவில் தற்போது ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக அரசு சார்பில் பலவித திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அனைவரும் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். தனிநபர் முதல் கூட்டு கணக்குகள் தொடங்குவதற்கான வசதியும் உள்ளது. தபால் அலுவலக சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கு பயனர்கள் இந்தியர் ஆகவும் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருப்பது அவசியம்.

தபால் நிலைய சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக 500 ரூபாயும் அதிகபட்ச வைப்புத் தொகை தனிநபர் கணக்குகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளைப் போலவே தபால் அலுவலக கணக்குகளிலும் பயணங்கள் தங்களுக்கு தேவையான நேரத்தில் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும். தபால் நிலைய கணக்குகளில் உள்ள உங்களின் தொகைக்கு அ…