பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சூரியன் என்பது மிகவும் அவசியமானதாகும். ஆனால் ஒரு கிராமத்தில் சூரிய ஒளி வராததால் அவர்கள் செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். அதாவது நவம்பர் 11 ‌ ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை சூரிய ஒளியின் வெளிச்சம் மிக மிக குறைவான அளவில் இருக்கும். இந்த காலகட்டத்தில் அண்டார்டிகாவில் இருப்பது போன்று மிகவும் குளிர் நிலவும். பல நூற்றாண்டுகளாக இப்படி இருந்த நிலையில் இதிலிருந்து தப்பிக்க மக்கள் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ரூ.1 கோடி நிதி திரட்டினர். அதன்பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பெரிய மலையின் மீது 40 சதுர மீட்டர் கண்ணாடியை நிறுவினர். இதன் எடை 1.1 டன் ஆகும். இது 1100 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதாவது உயரமான இடத்தில் உள்ள கண்ணாடி மீது குறைந்த ஒளி படும்போது அது அந்த ஒளியை எதிரொலிப்பதால் வெளிச்சம் நன்றாக கிடைக்கும். இதன் அடிப்படையில் தான் அந்த கிராம மக்கள் செயற்கை சூரிய ஒளியை பெற்றனர். இந்த கிராமம் எங்கு உள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது இத்தாலி நாட்டில் உள்ள விக்னெல்லா கிராமத்தில் தான் செயற்கை சூரிய ஒளியை நிறுவியுள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் 200 பேர் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.