பிரசித் கிருஷ்ணா சிறப்பாக வருவார் என்று நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்..

கவுகாத்தியில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடி சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. இந்திய அணி தொடர்ந்து 3வது டி20 போட்டியில் 200 ரன்கள் கடந்தது. எனவே  மூன்றாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,   மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார்.

அது மட்டுமல்லாமல் இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் ரன்கள் கசிந்தன. குறிப்பாக பிரசித் கிருஷ்ணா  4 ஓவரில் 68 ரன்களை வாரி வழங்கினார். இதனால் அவர் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இவரையா உலக கோப்பை அணியிலும் எடுத்து வைத்திருந்தீர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு, இவருக்கு பதிலாக தீபக் சகரை களமிறக்க வேண்டும் என்றெல்லாம் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடந்து வரும் டி20ஐ தொடரின் முதல் 3 ஆட்டங்களில் 1/50, 3/41 மற்றும் 0/68 என்ற மோசமான பந்துவீச்சைப் பதிவு செய்தார் பிரசித் கிருஷ்ணா. அதாவது, 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ள பிரசித் 159 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை கொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

இந்நிலையில் பிரசித் கிருஷ்ணாவுக்கு ஆஷிஷ் நெஹ்ரா ஆதரவு தெரிவித்ததோடு, அவரிடம் திறமைக்கு பஞ்சமில்லை என்று கூறினார். ஸ்போர்ட்ஸ் 18 உடன் பேசும் போது நெஹ்ரா இந்த விஷயங்களை கூறினார். பிரசித் கிருஷ்ணா படிப்படியாக முன்னேறுவார் என்று நெஹ்ரா நம்புகிறார்.

 இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஆஷிஷ் நெஹ்ரா,  “பிரசித் கிருஷ்ணா போன்ற ஒருவரைப் பற்றி பேசும்போது திறமைக்கு பஞ்சமில்லை. அவர் நிச்சயமாக இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரங்களில் ஒருவர். இங்கே, நீங்கள் டி 20 வடிவத்தைப் பற்றி பேசுகிறீர்கள், இது 3 ஆட்டங்கள் மட்டுமே மற்றும் டி 20 ஐ போட்டிக்கு முன் அவர் நிறைய கிரிக்கெட் விளையாடவில்லை. அவர் இங்கிருந்து மட்டுமே சிறப்பாக வருவார் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும் நெஹ்ரா, “சில நேரங்களில், ஒவ்வொரு அணியும் விஷயங்களைத் திட்டமிட்டு வியூகம் வகுக்கிறது . ஆனால் எல்லாவற்றையும் முன்கூட்டியே செய்ய முடியாது. இரு அணிகளும் யார்க்கர்களை வீசுவதில்லை என்று இன்று முடிவு செய்திருப்பதாக நான் நினைக்கிறேன். “ஆம், யார்க்கர்களை வீசுவது கடினம். ஆனால், ஒன்று அல்லது இரண்டு ஒற்றைப்படை பந்துகளில் யார்க்கர்களை வீச முடியும்.  இருப்பினும், பிரசித் கிருஷ்ணா. அந்த நல்ல யார்க்கர்களை வீச முடியும். ஆம், அது ஈரமான அவுட்ஃபீல்டு. அந்த சூழ்நிலைகளில் நீங்கள் ஒரு யார்க்கரை வீச முடியும் என்றால், அது ஒரு டாட் பந்தாக இருக்கலாம் அல்லது நீங்கள் ஒரு விக்கெட்டைப் பெறலாம். ஒரு விக்கெட் ஆட்டத்தை மாற்றும்,” என்று கூறினார்.