2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில், திமுக, அதிமுக, நாதக, பாஜக, அமமுக என 5 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. இந்நிலையில் தேர்தலில் எம்பி வேட்பாளர்களின் அதிகபட்ச செலவு ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மக்களவை தொகுதியில் 14 பிரசார வாகனங்கள் வரை பயன்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய SC, ST வேட்பாளர்கள் ரூ.12,500 மற்றும் மற்றவர்கள் ரூ.25,000 டெபாசிட் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை 3 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.