இளம் வயதில் நாம் சைக்கிள் ஓட்டும் போது கைப்பிடியை விட்டுவிட்டு ஜாலியாக செல்வோம். ஆனால் அது சில நொடிகள் மட்டுமே நம்மால் முடியும். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நம்மால் கையை விட்டுக் கொண்டு சைக்கிள் ஓட்ட முடியாது.

இந்த நிலையில் கனடாவை சேர்ந்த ராபர்ட் முர்ரே என்ற நபர் கைப்பிடியை பிடிக்காமல் சுமார் 130.29 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த தூரத்தை அவர் 5 மணி நேரம் 37 நிமிடங்களில் கடந்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட அவர் இதை செய்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.