தமிழகத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஜூன் 30-ம் தேதியுடன் 5 வருடம் முடிவடைந்தவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது ஜூன் 30-ம் தேதியுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதிகளை பதிவு செய்து ஒரு வருடம் முடிவடைந்து இருந்தால் போதுமானது எனவும் அதனைப் போலவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர்களின் வயது 45 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.