தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 5g சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 4g டேட்டாவுக்கு ரீசார்ஜ் செய்தால் அது வரம்பற்ற இணைய சேவையான 5g- க்கு வழங்கப்படுகிறது. 5ஜி சேவைக்கு என தனி ரீசார்ஜ் எதுவும் கிடையாது. இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே பிஎஸ்என்எல் தனது சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. 5g சேவை வழங்கப்படவில்லை என்றாலும் 4ஜி சேவையை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வழங்குகிறது.

அதன்படி அறுபது ரூபாய்க்கு டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை வழங்கியுள்ளது. இதில் உங்களுக்கான ஒரு நாள் டேட்டா வரம்பு தீர்ந்து விட்டால் இந்த திட்டத்தால் கிடைக்கும் டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய காலிங் மற்றும் மெசேஜ் ஆகிய சேவைகளை விட வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவை தான் முக்கியம். மீண்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அதாவது 58 மற்றும் 59 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ஆகும்.

இதில் 58 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் 7 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுவதுடன் தினமும் 2ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. மொத்தம் ஏழு நாட்களுக்கு 14 ஜிபி டேட்டா கிடைக்கும். ஒரு நாளில் 2 ஜிபியை பயன்படுத்தி முடித்து விட்டால் 40kbps வேகம் கிடைக்கும். இதில் காலிங் மற்றும் மெசேஜ்க்கான பயன்கள் இருக்காது. இதற்கு அடிப்படையான திட்டம் தேவை. அடுத்ததாக 59 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 7 ஜிபி டேட்டாவும் வரம்பற்ற காலிங் வசதியும் வழங்கப்படுகின்றது. ஆனால் மெசேஜ் வசதி எதுவும் கிடையாது. இதற்கு அடிப்படை பிளான் தேவையில்லை. தினமும் ஒரு ஜிபி டேட்டா வீதம் ஏழு ஜிபி உங்களுக்கு கிடைக்கும்.