ஓலா, உபர் போன்ற செயலிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும், வாகனங்களுக்கு மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்தல், பைக் டாக்ஸிகளை தடை செய்தல் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் மதுரை திருச்சியிலும் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளார்கள்.

இந்த போராட்டத்தில் பத்தாயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் மூலமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் செயலியில் இருந்து விலகி உள்ளார்கள். இதனால் குறைந்த அளவில் ஓட்டுனர்களே வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே கட்டணம் உயர்ந்துள்ளது .சென்னையில் போராட்டத்திற்கு முன் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு 400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 1200 முதல் 1400 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த கட்டணம் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.