தமிழக அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகள் மற்றும் மக்கள் தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதாவது விவசாயிகள் இயற்கை பேரிடர் நிவாரணம், பயிர் கடன் ஊக்கத்தொகை, உதவி தொகை உள்ளிட்டவைகளை பெறுவதற்கு தனித்தனி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிப்பதை தடுக்கும் வகையிலும் காலம், நேரத்தை குறைக்கும் நோக்கத்திலும் GRAINS என்ற இணையதளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக அனைத்து நலத் திட்ட உதவிகளையும் பெற வேண்டும். இதில் 13-க்கும் மேற்பட்ட துறைகளின் நலத்திட்ட பலன்களை விவசாயிகள் எளிதில் பெரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.