நாம் விமானத்தில் பயணிக்கும் போது தொலைபேசியில் நெட்வொர்க்கை நிறுத்தாவிட்டால் அதை விமானத்தின் வழி செல்லுதல் அமைப்பில் குறுக்கிடலாம். இதனால் விமானம் பரப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் விபத்துகளும் ஏற்படும். கையடக்க தொலைபேசியில் இருந்து வரும் சிக்னல்கள் விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்பை குழப்பலாம். இதனால் விமானியுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படக்கூடும். எனவே விமானத்தில் பயணிக்கும் போது மொபைல்களை பிளைட் மோடில் வைத்திருப்பது அவசியம்.