பாட்னாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டு ஏர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவரது நான்கு குழந்தைகளும் கவனிக்க ஆளின்றி தவித்துள்ளனர். இதனால் குழந்தைகள் கொச்சி நகர மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதில் 4 மாதமே ஆன பச்சிளம் குழந்தையும் அடங்கும். இந்நிலையில் 4 மாத குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தபோது பெண் காவலரான ஆர்யா என்பவர் அதற்கு தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.