தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் தொடர்ந்து இருக்கும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6720 ரூபாயாக இருக்கிறது. இதேபோன்று சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதனால் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 53,760 ரூபாயாக இருக்கிறது. இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 1.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.97.50-க்கும், ஒரு கிலோ வெள்ளை 97 ஆயிரத்து 500 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.