இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே மத்திய அரசு பெரும் லட்சியத்துடன் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்லீப்பர் பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சென்னையில் உள்ள ஐ சி எப் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இயக்கப்படும் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் ஸ்லீப்பர் பெட்டிகள் சேவையுடன் வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் 80 ஸ்லீப்பர் கோச்சுகள் தயார் செய்யப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை – மைசூரு, சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.