தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை 100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதன் எதிரொலியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வெளிச்சந்தையில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்வது நீடித்தால் தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் விலகியதால் விவசாயிகள் தக்காளி பயிர் இடுவது கணிசமாக குறைந்தது. இதனால் கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.