ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மத்திய அரசு ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குகிறது.

தமிழ்நாட்டிலும் இந்த அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கையான இந்த அரிசியை உண்பது உடல் நலனுக்கு தீங்கு என்ற சர்ச்சை தற்போது தொடங்கியிருக்கிறது. அதோடு வெளி மாநிலத்தில் இருந்து இந்த அரிசியை வாங்கினால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற பஞ்சாயத்தும் எழுந்துள்ளது.