இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். சாமானிய மக்களும் அதிக அளவு சேமிக்க வேண்டும் என்பதற்காக தபால் நிலையத்தில் பல திட்டங்கள் அமலில் உள்ளது. அதன்படி தபால் அஞ்சலக சேமிப்பு திட்டம் பயனர்களுக்கு நான்கு சதவீதம் வரைக்கும் வருடாந்திர வட்டி வழங்குகின்றது. முதலில் 500 ரூபாய் சேமிப்பு செய்து விருப்பத்திற்கு ஏற்ப டெபாசிட் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் குறைந்தது அக்கவுண்டில் 500 ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும். ஒருவேளை மினிமம் பேலன்ஸ் வைத்துக்கொள்ள தவறினால் 100 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும். இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணைந்து பயன்பெற முடியும் எனவும் இந்த தபால் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர தபால் நிலையத்தின் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காசோலை, ஏடிஎம் கார்டு, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆதார் இணைப்பு, அடல் பென்சன் திட்டம், சுரக்‌ஷா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற வசதிகளும் பயனர்கள் பெற்று கொள்ளும் வசதியும் உள்ளது.