காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம்
அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தி தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் எம்பி-ஆக நீடிக்க முடியாது என்பது நாடாளுமன்ற விதி. மோடியை பற்றி அவதூறாக பேசியதாக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.