தமிழகத்தில் வார இறுதி விடுமுறை நாட்களில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இருந்தாலும் சிலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் பயணம் செய்கின்றனர். இதனை தடுப்பதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதிய ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் காத்திருக்கும் சிரமத்தை குறைப்பதற்காகவும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்ட புதிய ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கு இணையான கூடுதல் ரயில் பாதை அமைக்கப்படும் எனவும் மூன்று வழி சாலைகளுக்கான வேலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் நான்கு வழி சாலைக்கான வேலை முடிக்க 8 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளார். இதனால் இனி பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.