இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் மோதி வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானைகள் ரயில் தண்டவாளத்தால் அதிகளவு உயிரிழக்கின்றன. தமிழக வனத்துறை சமீபத்தில் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக AI அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த AI தொழில்நுட்பம் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து தண்டவாளத்திற்கு அருகில் வந்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.