தமிழகத்தில் கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் பள்ளி குழந்தைகள் அனைவரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தி பாடங்களை கற்றனர். அதன் பிறகு மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அதாவது மொபைல் போனில் கேமிங் மற்றும் சாட்டிங் என பிசியாக இருந்து வருவதால் வெளிப்புற விளையாட்டுகளை மொத்தமாக மறந்து விட்டனர். அதே சமயம் பல்வேறு பள்ளி மாணவர்கள் மொபைல் கேம் விளையாடி அடிமையாகி விட்டதால் தற்கொலை சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்நிலையில் குழந்தைகளை மொபைல் போன் உலகத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கும் குழந்தைகளை கவருவதற்கும் தாம்பரம் அருகே குளிரூட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுகளின் மூலம் குழந்தைகளின் மனநிலை மற்றும் உடல்நலம் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இது தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.