தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்பத் தலைவியினுடைய விபரங்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்று இல்லத்தரசிகளின் செல்போனிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் இன்று தமிழகம் ஜூலை 24ஆம் தேதி தொடங்கி இன்று (ஆகஸ்ட் 4) முடிவடைந்தது. இதுவரை 79.66 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.