தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருக்கின்றன. விவசாய பயன்பாட்டிற்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளைப் பொறுத்தவரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படும். உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும்  மின் பயன்பாட்டை  கணக்கீடு செய்ய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர்கள் முழுமையாக பொருத்தப்பட்ட பின் மாதந்தோறும் மின் கணக்கீடு முறை அமலுக்கு வரும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்த முறை அமலுக்கு வரும்பட்சத்தில், மின்கட்டணம் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் நுகர்வோர்கள் அதிகளவில் பயனடைவார்கள். மாதந்தோறும் மின் கணக்கீடு முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தது