ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில்  ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை, குடும்ப அட்டைதாரர்களுக்கு உடனுக்குடன் விநியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி  உத்தரவிட்டுள்ளார். ரேஷன் பொருட்கள் ஒருவேளை தரம் குறைவாக இருந்தால், அதை விநியோகம் செய்யாமல் உடனடியாக கிடங்குகளுக்கு அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் பொருட்களை கடையில் இருப்பு வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்