தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 6 -12ம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் பள்ளி திறக்கும் முதல்நாளே பாட புத்தகங்கள் வழங்கி பாடம் எடுக்கத் தொடங்கப்பட உள்ளது. விடுமுறை நீட்டிப்பை ஈடு செய்ய சனிக்கிழமையில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு வராத மாணவர்களை லிஸ்ட் எடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் முதல் நாளில் இருந்தே பள்ளிக்கு சென்று பாடப்படிப்புக்கு தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.