நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் பழங்குடியின மாணவர்களுக்காக 38000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.