நாடு முழுவதும் விலைவாசியானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் சாமானிய மக்கள் திணறிவருகிறார்கள் . இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்ததால் பருப்பு விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி 37% அதிகரித்ததன் காரணமாகத்தான் சில்லறைப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.5% ஆக அதிகரித்தது.

இதனை தொடர்ந்து ஜூலை மாதத்தில் 34.1% விலை உயர்ந்த துவரம் பருப்பும், 9.1% விலை உயர்ந்த பாசிப்பருப்பும் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் அரிசி உள்ளிட்ட தானியங்கள் பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் விகிதம் அதிகரித்துள்ளது. இதனால் அரிசி, தானியங்கள் விலை குறையும் என்று கணித்துள்ளனர்.