மத்திய அரசு ரூ.500 நோட்டு மற்றும் ஆதார் கார்டை தடை செய்யப் போவதாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது. இவ்வாறான தவறான செய்திகளை Fact Check செய்யும் PIB Fact Check தளம், இந்த செய்தி போலி என்று அறிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் உருவப்படம் இடம்பெறும் புதிய தொடரில் உள்ள ரூ.500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் உள்ளது. இந்த நோட்டின் பின்புறத்தில், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக ‘செங்கோட்டை’ சின்னம் இருக்கும்.

இந்த நோட்டின் நிறம் ஸ்டோன் கிரே. இந்த நோட்டுகளில் மற்ற வடிவமைப்புகளும் உள்ளன. எனவே 500 ரூபாய் நோட்டுகளில் பச்சைக் கோடு மாறியிருந்தாலும் அந்த நோட்டுகள் செல்லும் என்று தெளிவுபடுத் தியுள்ளது. அதே நேரத்தில் சந்தையில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதாக வெளியான செய்தியையும் ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. மேலும் இப்படியான தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. விளக்கத்தினை பார்க்க செய்தியின் தலைப்பை க்ளிக் செய்யவும்.