தமிழகத்தில் கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமாக முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை, சோழவரம் ஆகிய ஏரிகளுடைய நீர் இருப்பு பெருன்பான்மையான அளவில் குறைந்து வருகிறது.

இதில் பூண்டி சோழவரம் ஏரிகள் வறண்டு விடும் அளவிற்கு சென்று விட்டன. எனவே மக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஏற்கனவே பெங்களூர் போன்ற நகரங்கள் வறட்சியால் தவித்து வரும் நிலையில் சென்னையில் வளர்ச்சி ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.