பகல்பொழுது குறைவாகவும், இரவு பொழுது அதிகமாகவும் உள்ள இந்த ஆண்டின் மிக நீண்ட இரவாக இன்று இரவு அமைய உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் நமது நாட்டில் மிக நீண்ட இரவு நாளாக அமையும். இதை ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் ‘Winter Solstice’ எனக் கூறுகின்றனர். அதாவது வடக்கு அரைக்கோளம் சூரியனில் இருந்து சற்று அதிகம் சாய்ந்திருக்கும். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் பகல் நேரம் குறுகியதாகவும், இரவு நேரம் நீண்டதாகவும் இருக்கும்.