இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே அதிக அளவு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைப்பது மிகவும் அவசியம் என்பதால் அரசு பல சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சிறந்த ஐந்து முதலீடு திட்டங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டம்:

அரசாங்க ஓய்வூதிய முதலீட்டு திட்டமான இந்த திட்டத்தில் எந்த வித அச்சமும் இல்லாமல் முதலீடு செய்யலாம். நீண்ட கால சேமிப்பிற்கு ஏற்ற சிறந்த திட்டம் ஆகும்.இதில் தற்போது ஏழு புள்ளி ஒரு சதவீதம் பட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி:

ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய இந்த திட்டத்தில் 7.1 சதவீதம் நிலையான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 500 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தில் மக்கள் கணக்கை தொடங்கலாம்

மகிலா சம்மான் சேமிப்பு சான்றிதழ்:

இந்த திட்டம் பெண் முதலீட்டாளர்களுக்கு தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் இந்த திட்டத்தில் சேரலாம். மேலும் வட்டி பணம் காலாண்டுக்கு ஒரு முறை அல்லது பகுதி அளவு திரும்ப பெரும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

தபால் நிலைய பிக்சட் டெபாசிட்:

மிகவும் பாதுகாப்பான இந்த திட்டத்தில் உங்கள் பணத்தை குறுகிய காலம் முதல் நீண்ட காலம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் வட்டி வங்கிகளை விட அதிகமாக இருக்கும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ்:

இந்த திட்டம் சுருக்கமாக NSC என்று அழைக்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் வரி சலுகைகள் வழங்கப்படும். இது 5.6 வருடம் முதலீட்டு காலத்தை கொண்டுள்ளது. மேலும் 6.8 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும்.