HDFC வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை HDFC வங்கி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் செலவு 15 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

ஒரு நாள் முதிர்வு கால கடன்களுக்கான வட்டி விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.10% ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து ஒரு மாத கடனுக்கான வட்டி விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.30% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாத கடனுக்கு 8.6%, ஆறு மாத கடனுக்கு 8.9% மற்றும் ஒரு வருட கடனுக்கு 9.05%.வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.